டாலியனில் 17ஆவது கோடைகால டாவோஸ் மன்றக் கூட்டம் நிறைவு

Estimated read time 0 min read

கோடைகால டாவோஸ் மன்றக் கூட்டம் எனப்படும் உலகப் பொருளாதார மன்றத்தின் 17ஆவது புதிய சாம்பியன்களின் ஆண்டு கூட்டம் ஜூன் 25ஆம் நாள் அனைத்து நிகழ்ச்சி நிரல்களையும் சுமுகமாக முடித்துக் கொண்டு சீனாவின் டாலியன் நகரில் நிறைவு பெற்றது.

பெரிய அளவிலான புத்தாக்கம் என்ற தலைப்பில் நடைபெற்ற நடப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள, உலகளவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 1800 பிரதிநிதிகள் ஈர்க்கப்பட்டனர்.

இந்த விருந்தினர்களில் பலர், சீனாவின் புதிய தர உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிச் சாதனைகளில் கவனம் செலுத்தி, பாராட்டுகளைத் தெரிவித்தனர். சீனாவின் புத்தாக்கம் மற்றும் திறப்பு, உலகளாவிய பொருளாதாரத்தின் உறுதியற்றத்தன்மையைச் சமாளிப்பதற்கான சிறப்பம்சமாக மாறியுள்ளது என்றும், சீனாவின் நவீனமயமாக்கம் ஏற்படுத்தும் வாய்ப்புகள், உலகப் பொருளாதார மீட்சியையும் உலகளாவிய உள்ளடக்கும் தன்மை வாய்ந்த வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

உலகப் பொருளாதார மன்றத்தின் 18ஆவது புதிய சாம்பியன்களின் ஆண்டு கூட்டம் 2027ஆம் ஆண்டில் சீனாவின் தியன்ஜின் மாநகரில் நடைபெறும் என்று நிறைவு விழாவில் அறிவிக்கப்பட்டது.

You May Also Like

More From Author