சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், மே 15ஆம் நாள் முற்பகல், சொங்நான்ஹையில் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் சிறிய அளவிலான சந்திப்பை நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், அரசுத் தலைவர் டிரம்பின் சீனப் பயணம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமாகும் என்றார். சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்கும் அடிப்படையில், சமாதான சக வாழ்வையும், ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியையும் நனவாக்குவதோடு, சரியான கூட்டு வாழ்வுப் பாதையில் நடைபோட வேண்டும் என்பது, இரு நாட்டு மக்கள் மற்றும் உலகிலுள்ள பல்வேறு நாட்டு மக்களின் பொது ஆர்வமாகும் என்றும் குறிப்பிட்டார்.
டிரம்பு கூறுகையில், எனது சீனப் பயணம் மிகவும் வெற்றிகரமான பயணமாகும். அமெரிக்க-சீன உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததோடு, மேலும் சீராக வளர்ச்சியடையும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
வாஷிங்டணில் அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கிற்கு விருந்தோம்பல் உபசரிப்பதை எதிர்பார்க்கின்றேன் என்று டிரம்ப் தெரிவித்தார்.
