சீன-அமெரிக்க உறவு கடந்த 4 ஆண்டுகளில், ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்த போதிலும் பொதுவான நிலையில் நிதானமாக உள்ளது என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கோ சியா குன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும், இரு நாட்டு தலைவர்களின் வழிகாட்டுதலில், இருதரப்பு குழுக்கள், கலந்தாய்வு மூலம், இரு நாட்டுறவின் கோட்பாடுகளை நிர்ணயித்துள்ளன.
இருத்தரப்பும், பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, 20க்கு மேற்பட்ட தொடர்பு அமைப்பு முறைகளை உருவாக்கி, சில துறைகளில் சாதனைகளைப் படைத்துள்ளன.
அதேவேளையில், சீனா எப்போதுமே கோட்பாடுகளில் நிலைத்து நின்று, சொந்த இறையாண்மை பாதுகாப்பையும் வளர்ச்சி நலனையும் பேணிக்காத்து, அமெரிக்காவின் தவறான நடவடிக்கைகளை உறுதியாக எதிர்த்து வருகின்றது என்று கூறினார்.