அமெரிக்க பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மீது சீனா எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சீன வெளியுறவு அமைச்சகம் டிசம்பர் 26ஆம் நாள் தெரிவித்தது.
சீனாவின் தைவானுக்கு அமெரிக்கா பெரிய அளவிலான ஆயுதங்களை விற்பனை செய்ய உள்ளதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. இது, ஒரே சீனா என்ற கோட்பாட்டையும் 3 சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளையும் கடுமையாக மீறியுள்ளதோடு, சீன இறையாண்மை மற்றும் உரிமை ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கின்றது. வெளிநாட்டு தடைக்கு எதிரான சீன மக்கள் குடியரசு சட்டத்தின் கீழ் உள்ள சில விதிகளின்படி, அமெரிக்க பாதுகாப்பு தொடர்பான 20 நிறுவனங்கள் மற்றும் 10 மூத்த நிர்வாகிகளுக்கு எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ள சீனா தீர்மானித்துள்ளது.
தொடர்புடைய எதிர் நடவடிக்கைகள் 2025ஆம் ஆண்டின் டிசம்பர் 26ஆம் நாள் முதல் அமலாகுகிறது என்று தெரிவித்துள்ளது.
