சமோயா தலைமை அமைச்சர் ஃபியாமே அம்மையார் நவம்பர் 20ம் நாள் முதல் 28ம் நாள் வரை சீனாவின் 8 நகரங்களில் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது அவர் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், ஒன்றுக்கொன்று மதிப்பு மற்றும் நம்பிக்கை அளித்தல், கூட்டாளியுறவின் வெற்றிக்கு அடிப்படை காரணி. சீனா, பல்வேறு நாடுகளுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. சீனாவுடன் இணைந்து வணிக ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத் துறையில் கூட்டு வளர்ச்சியைப் பெறுவோம். சீன அரசுத் தலைவர் ஷின்ச்சின்பிங் முன்வைத்த 3 முன்மொழிவுகள், சர்வதேச பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாகவும் பொறுப்புடையதாகவும் உள்ளன என்று தெரிவித்தார்.
நீண்டகாலமாக சீனா சமோயாவுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஃபியாமே, சீன பாணியுடைய நவீனமயமாக்கத்தின் அனுபவத்தைக் கற்றுக்கொள்ள சமோயா விரும்புகிறது என்றும் கூறினார்.