“கடல்சார் மண்டலச் சட்டம்” “தீவுக்கூட்டக் கடல் வழி சட்டம்” ஆகியவற்றைப் பிலிப்பைன்ஸ் வெளியிட்டது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் சீனாவுக்கான பிலிப்பைன்ஸ் தூதரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌநின் 8ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் இது பற்றிய செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் வலியுறுத்துகையில், இந்த “கடல்சார் மண்டலச் சட்டம்” , சீனாவின் ஹூவாங்யேன் தீவு, நன்ஷா தீவுகளின் பெரும்பாலான பகுதி, தொடர்புடைய கடற்பரப்பு ஆகியவற்றைப் பிலிப்பைன்ஸின் கடல் பிரதேசத்தில் சேர்த்துள்ளது.
தென் சீனக் கடலிலுள்ள சீனாவின் உரிமைப் பிரதேச இறையாண்மையையும் கடல்சார் உரிமைகளையும் இது கடுமையாக மீறியுள்ளது. இதைச் சீனா கடுமையாக கண்டித்து உறுதியாக எதிர்க்கிறது என்றார்.