நவ சீனா நிறுவப்பட்ட பிறகு ஆறு மற்றும் கடல் வழிப் போக்குவரத்தை இணைக்கும் முதலாவது கால்வாயான பிங்லு கால்வாய், செப்டம்பர் 16ஆம் நாள், அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது. இது, சீனாவுக்கும் ஆசியானுக்குமிடையிலான ஒத்துழைப்புக்குரிய பொன்வழித்தடமாக மாறியுள்ளது.
இவ்வாண்டு, சீன-ஆசியன் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 5ஆவது ஆண்டு நிறைவாகும். பல வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு, இக்கால்வாய், அதிகாரப்பூர்வமாகப் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக்கால்வாய், சீன-ஆசியான் ஒத்துழைப்புக்குப் பெரிதும் நன்மை பயக்கும். செலவுகளைக் குறைத்து, பயன்களை அதிகரிக்கும். ஆசியானின் பல நாடுகளைப் பொருத்தவரை, இக்கால்வாய், அவற்றின் வளர்ச்சிக்கான தடைகளை நீக்குவதற்கான புதிய வழித்தடலாகும்.
மேலும், போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டு இக்கால்வாயானது உலகில் புதிய போக்குவரத்து மையமாகத் திகழும். இது, சீன-ஐரோப்பிய சரக்குத் தொடர்வண்டிச் சேவையையும் இருப்புப் பாதை மற்றும் கடல் வழி இணைப்பு போக்குவரத்து சேவையையும் நன்றாக ஒருங்கிணைக்கும். அதோடு, பிராந்தியத் திறப்புக்கான புதிய நிலைமையை உருவாக்கி, உலகத்துடன் மேலும் நன்றாகத் தொடர்பு கொள்ளவும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
