சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பெய்ஜிங்கில் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியைச் சந்தித்துப்பேசினார்.
வாங் யீ கூறுகையில், சீன-இந்திய உறவின் சீரான வளர்ச்சி, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கு முழுமையாகப் பொருந்தியது. இது தெற்குலக நாடுகளின் நியாயமான உரிமையைப் பேணிக்காக்கவும் ஆசிய மற்றும் உலகத்தின் அமைதி, நிதானம், வளர்ச்சி மற்றும் செழுமைக்கு பங்காற்றவும் துணை புரியும் என்றார்.
விக்ரம் மிஸ்ரி பேச்சுவார்த்தையில் கூறுகையில், இந்திய மற்றும் சீன அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களின் படி இரு நாடுகள் தொடர்ச்சியான பயனுள்ள பேச்சுவார்த்தை மற்றும் தொடர்புகளை மேற்கொண்டு, கருத்து வேற்றுமையை உரிய முறையில் தீர்க்கப் பாடுபட்டு, பல்வேறு துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை மீண்டும் துவக்குவதை முன்னேற்றி வருகிந்றன என்றார்.
சீனாவுடன் இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாட இந்தியா விரும்புகின்றது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் பதவி ஏற்றிய சீனா மேற்கொள்ளும் பணிகளை இந்தியா முழுமையாக ஆதரிக்கும் என்றார்.