ஃபூடான் பல்கலைக்கழம் நிறுவப்பட்ட 120ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அவர் கூறுகையில்,
இப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன்.
கடந்த 120 ஆண்டுகளில், யுகத்தின் முன்னேற்றங்களுக்கு ஏற்ப, ஃபூடான் பல்கலைக்கழகம் நாட்டுப்பற்று பாரம்பரியத்தையும் சிறப்பியலையும் உருவாக்கியுள்ளது. அதிகமான சிறந்த திறமைசாலிகளை வளர்த்து, தற்சார்பு சாதனைகளை உருவாக்கி, நாட்டின் கட்டுமானம் மற்றும் தேசிய இனத்தின் முன்னேற்றங்களில் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளது.
புதிய துவக்கப் புள்ளியிலிருந்து, புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச சிந்தனை என்ற வழிகாட்டலின் அடிப்படையில், கல்வி ஆராய்ச்சிச் சீர்திருத்தை ஆழமாக்கி, அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்கம் மற்றும் திறமைசாலிகளை வளர்த்து, தத்துவ இயலின் அறிவு, தத்துவம் மற்றும் வழிமுறைகளின் புத்தாக்கத்தில் ஈடுபட்டு, தேசிய நெடுநோக்குத் திட்டம், பிரதேச பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சி ஆகியவற்றுக்கான சேவை ஆற்றலை தொடர்ந்து ஆழமாக்கி, சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தை முழுமைப்படுத்தி, நாடு வல்லரசு கட்டுமானத்தை முன்னேற்றி, தேசிய இனத்தின் மறுமலர்ச்சிக்கு இப்பல்கலைக்கழகம் தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.