வங்கதேச குடிமக்களுக்கு இந்தியாவிற்கு வருவதற்கான சுற்றுலா விசா சேவைகளை மீண்டும் வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த அசாதாரண சூழல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த இந்த சேவை, மீண்டும் தொடங்கப்படுவது இரு நாட்டு மக்களிடையேயான உறவையும், பொருளாதாரப் பரிமாற்றத்தையும் வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
வங்கதேச மக்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா வழங்குவதாக இந்தியா அறிவிப்பு
