புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா – ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில், செயற்கை நுண்ணறிவு(AI), பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை மற்றும் தூய்மை ஆற்றல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளும் வரலாற்று சிறப்புமிக்க புதிய ஒப்பந்தங்களை வெளியிட்டு கூட்டு வியூகத்தை வலுப்படுத்தியுள்ளன.
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனாய் தகாஇச்சியை வரவேற்றுப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த உச்சிமாநாடு ஆசியாவின் மிக முக்கியமான மூலோபாயக் கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தியா – ஜப்பான் 16-வது வருடாந்திர உச்சிமாநாடு
