சீனாவின் பல்வேறு பகுதிகளின் வெளிநாட்டு வர்த்தக சாதனைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அனைத்து பிரதேசங்களும் தனது சிறந்த வர்த்தக பயன்களை வெளிக்காட்டியுள்ளதோடு, குவான்டோங்-ஹாங்காங்-மக்காவ் பெரிய விரிகுடா பகுதி, மஞ்சள் ஆற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள ஒன்பது மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள், யாங்சே ஆற்றின் டெல்டா பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் சிறந்த தொடக்கத்தை வரவேற்றது.
சுங்கதுறை பொது நிர்வாகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களில், குவாங்டாங்-ஹாங்காங்-மக்காவ் பெரிய விரிகுடாவைச் சேர்ந்த ஒன்பது பெருநிலப்பகுதி நகரங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 1.57 லட்சம் கோடி யுவானை எட்டி, முந்தைய ஆண்டை விட 22.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தேசிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வளர்ச்சி விகிதத்தை விட 4.1 சதவீத புள்ளிகள் அதிகமாகும். மேலும் இது நாட்டின் மொத்த வெளிநாட்டு வர்த்தக மதிப்பில் 20.4 சதவீதத்தை வகித்து, நாட்டின் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிக்கு 24.1 சதவீதம் பங்களிக்கிறது. மஞ்சள் ஆற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள ஒன்பது மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 1.09 லட்சம் கோடி யுவானை எட்டி, முந்தைய ஆண்டை விட 15.4 சதவீதம் அதிகரித்து, வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. யாங்சே ஆற்றின் டெல்டா பகுதியில் உள்ள மூன்று மாகாணங்கள் மற்றும் ஒரு மாநகரின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 3 லட்சம் கோடி யுவானை எட்டி, முன்பு காணாத புதிய சாதனையை படைத்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மொத்த மதிப்பில் அதன் பங்கு 38.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
