நட்பு ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை சீனாவின் உபகரண உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தித் தொழில்கள் சிறப்பான வளர்ச்சி வேகத்தை அடைந்துள்ளன என்று சீனத் தேசிய புள்ளியியல் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபு லிங்ஹுய் 17ஆம் நாள் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தொழில்துறை சார் ரோபோட்களின் உற்பத்தி அளவு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 28.5% அதிகரித்துள்ளது. அதே வேளையில், 3டி அச்சிடும் உபகரணங்கள் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரிகளின் உற்பத்தி அளவு முறையே 52.3% மற்றும் 40.2% அதிகரித்துள்ளது.
