இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கத்துக்கு ஷி ச்சின்பிங் ஆறுதல்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் குறித்து சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஆகஸ்டு 17ஆம் நாள், அந்நாட்டின் அரசுத் தலைவர் பிரபோவோ சுபியாண்டோவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ஷி ச்சின்பிங், சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பில், இந்நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கும், காயமுற்றோருக்கும் ஆறுதல் தெரிவித்தார். மேலும், இந்தோனேசிய அரசின் தலைமையில், இந்தோனேசிய மக்கள் வெகுவிரைவில் சீற்றத்தைத் தோற்கடித்து, தாயகத்தை மீண்டும் கட்டியமைப்பது உறுதி என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

You May Also Like

More From Author