முதல் 7 மாதங்களில் சீனாவின் தொழில்துறை உற்பத்தி 5.3%அதிகரிப்பு

சீனத் தேசிய புள்ளிவியல் பணியகம் 17ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை, உற்பத்தியும் விநியோகமும் சீராக வளர்ந்தன, வேலைவாய்ப்பும் பொருட்களுக்கான விலைவாசியும் பொதுவாக நிலையாக இருந்தன, வெளிநாட்டு வர்த்தகம் தொடர்ந்து மீள்திறனை வெளிப்படுத்தியது, புதிய வளர்ச்சி உந்துசக்திகள் வலுப்பெற்றன. மேலும், புதிய வளர்ச்சி உந்துசக்திகள் வலுவடைந்தன. தேசிய பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக சீராக இயங்கியது.

இதில், ஜனவரி முதல் ஜூலை வரை, நாடு முழுவதிலும் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.3%அதிகரித்தது. தேசிய சேவைத் துறை உற்பத்தி குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.7% அதிகரித்தது.

நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த சில்லறை விற்பனை தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.6% அதிகரித்தது.

வேலைவாய்ப்பு நிலைமை பொதுவாக நிலையாக இருந்து, வேலையின்மை விகிதம் சராசரியாக 5.2% இகுந்த்து. சந்தை விலைகள் மிதமாக உயர்ந்து, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைப் போலவே உள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.9% உயர்ந்து காணப்பட்டது.

You May Also Like

More From Author