மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாக மக்கள் வாழ்க்கை முடங்கியுள்ளது.
நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு, மரங்கள் முறிந்து விழுதல், கட்டிட விபத்து மற்றும் மின்சாரம் தாக்கியதில் பல உயிரிழப்புகள் நேரிட்டுள்ளதால் ஒட்டுமொத்த நிர்வாகமும் தற்பொழுது உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு குடியிருப்பு ஒன்றின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கி பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுதவிர, குர்லா மற்றும் கோரேகான் பகுதிகளில் பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்ததில் இருவர் பலியாகியுள்ளனர்.
கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தேங்கி நின்ற மழைநீரில் மின்சாரம் தாக்கி, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை, விமானச் சேவைகள் பாதிப்பு; தொடரும் ரெட் அலர்ட்
