அமெரிக்கா 250-வது சுதந்திர தின கொண்டாட்டம் – இந்தியா சார்பில் ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் பங்கேற்பு!

Estimated read time 1 min read

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பில், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுதர்ஷினி பங்கேற்று இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியது.

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தையொட்டி, நியூயார்க் துறைமுகத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பு மற்றும் SAIL 4th 250 நிகழ்ச்சியில், இந்திய கடற்படையின் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி பங்கேற்றது.

ஹட்சன் ஆற்றில் நடைபெற்ற PARADE OF SAIL அணிவகுப்பின்போது, இந்திய தேசியக் கொடியுடன் பயணித்த இந்தக் கப்பல், இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை உலக அரங்கில் எடுத்துக்காட்டியது.

மேலும், லோகாயன் – 2026 என்ற 10 மாத கடல் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் கப்பல் அமெரிக்கா சென்றுள்ளது. நார்ஃபோக் மற்றும் பால்டிமோர் நிகழ்வுகளில் பங்கேற்றதைத் தொடர்ந்து, நியூயார்க் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ள ஐஎன்எஸ் சுதர்ஷினியின் வருகை, இந்தியா – அமெரிக்கா இடையேயான கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author