அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.92.17 ஆக வீழ்ச்சி  

Estimated read time 1 min read

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் சூழல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக, இன்று காலை 10:40 மணி நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92.17 ஆக சரிந்தது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85%-க்கும் மேலாக இறக்குமதி செய்கிறது.
மத்திய கிழக்கில் போர் மூண்டுள்ளதால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இது இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரித்து, ரூபாய் மதிப்பை பலவீனப்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author