‘எம்பி ஹோண்டியஸ்’ சொகுசு கப்பலில் 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி! சிகிச்சைக்காக நெதர்லாந்து மாற்றம்!  

Estimated read time 1 min read

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘எம்பி ஹோண்டியஸ்’ என்ற சொகுசு கப்பலில் பயணித்த இரண்டு இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் (Hantavirus) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினாவிலிருந்து பயணத்தைத் தொடங்கிய ‘எம்பி ஹோண்டியஸ்’ சொகுசு கப்பலில் கடந்த சில நாட்களாக மருத்துவ நெருக்கடி நிலவி வருகிறது.
இந்தக் கப்பலில் பயணித்தவர்களில் இதுவரை மூன்று பேர் ஹன்டா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

You May Also Like

More From Author