சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக சிந்தனைகள் உலகின் நிர்வாகத்துக்கு பயனுள்ள அனுபவங்களை வழங்கியுள்ளதாக பன்னாட்டு செய்தி ஊடகங்கள் அண்மையில் வெளியிட்ட கட்டுரைகளில் சுட்டிக்காட்டின.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சமூகத்தின் நிதானம் மற்றும் மக்களின் நலனை முக்கிய இடத்தில் வைப்பதில் ஊன்றி நிற்கின்றது. சொந்த நிலைமைக்கு உகந்த வளர்ச்சிப் பாதையைத் தேடி வரும் நாடுகளுக்கு இந்த வளர்ச்சி முறை முக்கிய அனுபவங்களை வழங்கியுள்ளதாக லாரிபப்லிக் எனும் ஸ்பெயின் செய்தி இணையத்தளம் அறிவித்துள்ளது.
மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, பெரும் மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஒரு பெரிய நாட்டுக்குத் தலைமை தாங்கி சோஷலிச நவீனமயமாக்க கட்டுமானத்தை மேற்கொள்ள முடியும் என்பதற்கான முக்கிய காரணம் முழுமையான நெடுநோக்கு வாய்ந்த தத்துவ அமைப்பு முறையை உருவாக்கியதாகும் என்று ஜிம்பாப்வேயின் தி ஹெரால்ட் எனும் செய்தித்தாள் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.
