“போதையில்லா தமிழகம்தான் இலக்கு! 436 அதிரடி திட்டங்கள்”- அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

Estimated read time 0 min read

போதையில்லா தமிழகம்தான் தவெக அரசின் இலக்கு. போதைப் பொருட்களை ஒழிப்பது குறித்து முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

அமைச்சரவை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “அனைத்து துறைகளுக்கும் முதலமைச்சா் இலக்கு நிர்ணயித்துள்ளார். போதையில்லா தமிழகம் என்ற நிலைப்பாட்டில் அனைத்து பணிகளை முடுக்கிவிட அறிவுறுத்தியுள்ளார். தொலைநோக்கு திட்டங்களை நோக்கி செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். தமிழக மக்கள் மேம்பாட்டுக்காக எதை நோக்கி பயணிக்க வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். குட்கா விற்பனை செய்யும் கடைகளில் நாள்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ள திட்டங்களை துறை சார்ந்து அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டும். நல்லாட்சி, போதை இல்லா தமிழகம் போன்ற திட்டங்கள் உள்ளன. துறைவாரியாக தேர்தல் வாக்குறுதிகளை உள்ளடக்கிய 436 திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். புதிய திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது” என்றார்.

You May Also Like

More From Author