வேளாண் வானிலை கண்காணிப்பு கட்டுமைப்பு உருவாக்கம்

சீனாவில் 642 செயற்கை கண்காணிப்பு நிலையங்கள், 738 தானியங்கி கண்காணிப்பு நிலையங்கள், 15 சிறப்பு சேவை மையங்கள், 91 ஆய்வு மையங்கள் உள்ளிட்ட நவீனமயமான வேளாண் வானிலை கண்காணிப்பு கட்டமைப்பு  உருவாக்கப்பட்டுள்ளது.

விண்வெளியிலுள்ள செயற்கைக்கோள் உணர்வறிதல், வானத்திலுள்ள ட்ரோன்கள் மற்றும் ராடார் ஆய்வு கண்காணிப்பு, தரையிலுள்ள ஆய்வுத் தளங்கள் ஆகியவை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தேசிய தானிய பாதுகாப்பு வானிலைக் கண்காணிப்பு அமைப்புமுறை ஏற்கனவே உருவாக்கப்பட்டது.

துல்லியமான வானிலை தரவுகள், வேளாண் உற்பத்தியின் பல்வேறு தொடர்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து, விவசாயப் பருவம், பேரழிவுக்கான முன்னெச்சரிக்கை, விளைச்சலுக்கான ஆலோசனை ஆகிய சேவைகளை வழங்கும்.

சீனத் தேசிய செயற்கைகோள் வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வாளர் சாங் மிங்வெய் கூறுகையில்,

ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும், ஃபான் யூன் செயற்கைகள், விளை நிலம் தொடர்பான கண்காணிப்பு தகவல்களைச் சேகரித்து வரும். இதன் மூலம், வெப்பநிலையின் மாற்றங்களின்படி, விவசாயிகளுக்கு தானியம் பயிரிடுவதற்கான துல்லியமான ஆலோசனைகளை வழங்கலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author