இந்தோனேசியாவில் பிரதமர் மோடி; நேரில் வரவேற்ற அதிபர்

Estimated read time 1 min read

மூன்று நாடுகள் பயணத்தின் முதல்கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடிக்கு தலைநகர் ஜகார்த்தாவில் அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ((Prabowo Subianto)) உற்சாக வரவேற்பு அளித்தார்.

இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணத்தின் முதற்கட்டமாக பிரதமர் மோடி ஜகார்த்தா சென்றடைந்தார். அவரை விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்ற இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, தனது அமைச்சர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்

பின்னர், ஜகார்த்தா விமான நிலையத்தில் இந்தோனேசிய நடன குழுவினர் பாரம்பரிய நடனமாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்

நடன குழுவினரை கை தட்டி பாராட்டிய பிரதமர் மோடி, அங்கிருந்து காரில் தாம் தங்கியிருக்கக் கூடிய ஹோட்டலுக்கு புறப்பட்டார். ஹோட்டல் வரவேற்பறையில் கூடியிருந்த இந்திய வம்சாவளியினர், பாரத் மாதா கி ஜே எனவும், மோடி எனவும் கோஷமிட்டு பிரதமரை உற்சாகம் பொங்க வரவேற்றனர்

இதைத்தொடர்ந்து ஹோட்டல் முகப்பு அறையில் இந்தோனேசிய இசைக் குழுவினர் பாரம்பரிய இசைக் கருவியை மீட்டு, தனக்கு அளித்த வரவேற்பை பிரதமர் மோடி மெய்மறந்து பார்வையிட்டார்

You May Also Like

More From Author