பெரு நாட்டின் அரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கெய்கோ ஃபுஜிமோரிக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

பெரு நாட்டின் அரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கெய்கோ ஃபுஜிமோரிக்கு, சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் 6ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவும் பெருவும் பன்முக உத்திநோக்கு கூட்டாளிகளாகும் என்றும், இருநாட்டுறவு சீரான வளர்ச்சி போக்கை பேணுகிறது என்றும் தெரிவித்தார். சீனா-பெரு உறவின் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், இருநாட்டு பாரம்பரிய நட்பை முன்னெடுக்கவும், சீனா-பெரு பன்முக உத்திநோக்கு கூட்டாளியுறவை புதிய நிலைக்குச் செல்ல வழிகாட்டவும், இருநாட்டு மக்களுக்கும் மேலும் பயனளிக்கவும், ஃபுஜிமோரியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author