தென் சீனக் கடல் பற்றிய நடுவர் தீர்ப்பு குறித்து ஜப்பான் வெளியுறவு அமைச்சரின் உரைக்குச் சீனா கண்டனம்

தென் சீனக் கடல் பற்றிய நடுவர் தீர்ப்பு வெளியிடப்பட்ட 10ஆவது ஆண்டு குறித்து ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஜூலை 12ஆம் நாள் உரை நிகழ்த்தி இந்தச் சட்டவிரோத தீர்ப்பை வெளிப்படையாகப் பரப்புரை செய்தார். சீனாவின் சட்டப்பூர்வமான  அம்ச கருத்துக்களைக் குற்றஞ்சாட்டி தென் சீனக் கடல் விவகாரத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நாடு ஜப்பான் ஆகுமென அவர் தவறான கருத்தைத் தெரிவித்தார். இது குறித்து சீனா கடும் கண்டனம் மற்றும் உறுதியான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஜப்பான் தென் சீனக் கடலுடன் சம்பந்தப்பட்ட நாடு அல்ல. தென் சீனக் கடலிலுள்ள சீன உரிமைப் பிரதேசத்தின் இறையாண்மை மற்றும் கடல்சார் உரிமையில் தலையிட ஜப்பானுக்குத் தகுதி இல்லை. தென் சீனக் கடல் தீவுகளின் மீதான சீனாவின் இறையாண்மையும் இக்கடற்பரப்பிலுள்ள தொடர்புடைய உரிமை நலனும் போதுமான வரலாற்று மற்றும் சட்ட ஆதாரங்களைக் கொண்டுள்ளன. தென் சீனக் கடல் மீதான உரிமைப் பிரதேச இறையாண்மை மற்றும் கடல்சார் உரிமையைச் சீனா தொடர்ந்து உறுதியாகப் பேணிகாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author