தற்போதைய வர்த்தகத்தின் பதற்றமான நிலைமை, பல்வேறு நாடுகளின் வேலை வாய்ப்பு சந்தையை தொடர்ந்து பாதித்து வருவதாக சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹொங்போ 2ஆம் நாள் சர்வதேசத் தொழிலாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
113ஆவது சர்வதேச தொழிலாளர் கூட்டம் 2ஆம் நாள் ஜெனீவாவில் தொடங்கியது. இவ்வமைப்பு வெளியிட்ட உலக வேலை வாய்ப்பு மற்றும் சமூகத்தின் முன்னாய்வு அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில், உலகளவில் புதிய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 5 கோடியே 30 இலட்சமாகும். இது, கடந்த ஆண்டின் அக்டோபர் மாத முன்கணிப்பு தரவுகளை விட 70 இலட்சம் குறைவாகும்.
நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் பரந்தளவில் பயன்பாடு, சர்வதேச வேலை வாய்ப்பு சந்தையைத் தொடர்ந்து பாதித்து வருகிறது. ஊடகம், மென்பொருள் வடிவமைப்பு, நிதி உள்ளிட்ட அதிகளவில் எண்மயமாக்கப்பட்ட துறைகளில் வேலை வாய்ப்புகள் பெருமளவில் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.