அமெரிக்காவின் நியூயார்க் உட்பட பல இடங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மரங்கள், கார்கள் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.
அமெரிக்காவில் நவம்பர் முதல் மார்ச் வரை குளிர்காலம் நில அந்தச் சமயத்தில் கடும் பனிப்புயல்கள் தாக்கும். இந்த நிலையில் அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கி வருகிறது.
அந்த வகையில் நியூயார்க் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது.
இதனால் சாலைகளில் 4 அங்குலம் அளவுக்குப் பனி படர்ந்து காணப்படுகிறது. வீடுகள், மரங்கள், சாலையில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள் என அனைத்தும் பனி படர்ந்து வெள்ளிப் போர்வையை போர்த்தியது போலக் காட்சி அளிக்கின்றன.
சாலைகளில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்குத் தொடர்ந்து பனிப்பொழிவு இருந்து வருகிறது.
மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பனியை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
