அமெரிக்காவுக்கு ஏற்றிசெல்லப்பட்ட சீனாவின் பொருட்களின் மீதான சுங்க வரி விகிதம் 34 விழுக்காட்டிலிருந்து 84 விழுக்காடாக உயர்த்தப்படவுள்ளது என்று ஏப்ரல் 8ஆம் நாள் அமெரிக்க அரசு அறிவித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மேலும் தவறானது.
இது சீனாவின் நியாயமான நலன்களை சீர்குலைத்ததோடு, விதியை அடிப்படையாக கொண்ட பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையையும் பாதிக்கும் என்று சீன அரசவையின் சுங்க வரி ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அரசவையின் அனுமதியின் படி, ஏப்ரல் 10ஆம் நாள் 12:01 முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீது கூடுதல் சுங்க வரி வசூலிக்கப்படும். சுங்க வரி விகிதம் 34 விழுக்காட்டிலிருந்து 84 விழுக்காடாக உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.