அஸ்தனாவுக்குச் சென்று கசகஸ்தானில் அரசு முறைப் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 2ஆம் நாள் அந்நாட்டின் கசகஸ்தான் உண்மை எனும் செய்தித்தாள், கசகஸ்தான் சர்வதேச செய்தி நிறுவனத்தில் ஒருமனதாக செயல்படுவது, சீன-கசகஸ்தான் உறவின் புதிய அத்தியாயத்தை இயற்றுவதென்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டார்.
இக்கட்டுரையில், 11ஆண்டுகளுக்கு முன்பு, பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலம் என்ற முன்னெடுப்பை கசகஸ்தானில் முதன்முறையாக முன்வைத்து கசகஸ்தான் சமூகத்தின் பல்வேறு துறைகளின் ஆக்கப்பூர்வ வரவேற்பைப் பெற்றேன்.
இதையடுத்து, ஒரு மண்டலம் மற்றும ஒரு பாதை எனும் முன்மொழிவின் கூட்டு கட்டுமானத்தை இரு நாடுகள் துவங்கியுள்ளன. இரு நாட்டுறவின் வளர்ச்சியும் புதிய கட்டத்தை எட்டியது என்று குறிப்பிட்டார்.
இரு நாடுகளின் உறவு பற்றி அவர் குறிப்பிடுகையில், ஒன்றுக்கொன்று ஆதரவளித்து இன்பத் துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு அரசியல் துறையில் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையின் புதிய உயர்வை உருவாக்கியுள்ளன. ஒன்றுக்கொன்று நன்மை அளித்து கூட்டு வெற்றி பெற்று ஒருங்கிணைந்து வளர்த்து பயனுள்ள ஒத்துழைப்புகளின் புதிய சாதனைகளைப் படைத்துள்ளன.
ஒன்றுக்கொன்று உதவியளித்து ஒன்றிலிருந்து ஒன்று கற்றுக்கொண்டு பரிமாற்றத்தை மேற்கொண்டு மானிடப் பண்பாட்டியல் பரிமாற்றத்தின் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. ஒற்றுமையாக ஒருங்கிணைந்து சவால்களைக் கூட்டாக எதிர்கொண்டு சர்வதேச ஒத்துழைப்புகளின் புதிய பயன்களைப் பெற்றுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தை நோக்குகையில், சீன-கசகஸ்தான் ஒத்துழைப்புக்கு மாபெரும் வாய்ப்புகள் உண்டு. அதற்கு மாபெரும் சாதனைகள் படைக்கப்படுவது உறுதி என்றும் ஷிச்சின்பிங் கட்டுரையில் குறிப்பிட்டார்.