மத்திய கிழக்கு பகுதியின் அமைதி மற்றும் நிதானத்திற்கு சீன-பாகிஸ்தான் 5 முன்மொழிவுகள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, மார்ச் 31ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், பாகிஸ்தான துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான டாருடன் சந்திப்பு நடத்தினார்.

வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு பகுதியின் நிலைமை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிகொண்டனர். அதோடு, தொடர்புடைய 5 முன்மொழிவுகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

பகைமை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அமைதிக்கான பேச்சுவார்த்தையை வெகுவிரைவில் தொடங்க வேண்டும். இராணுவமற்ற இலக்குகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும். 

நீர் போக்குவரத்து பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டும். ஐ.நாவின் சாசனத்திற்கான முதன்மை தகுநிலைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் ஆகியவை இந்த முன்மொழிவுகளில் இடம்பெறுகின்றன.

You May Also Like

More From Author