கண்டுபிடிப்பு உந்துதல் பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக ஜோயல் மொகிர், பிலிப் அக்யோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக 2025 ஆம் ஆண்டிற்கான நோபல் பொருளாதார அறிவியல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
நீடித்த செழிப்புக்குத் தேவையான வழிமுறைகளை விளக்கிய இவர்களின் முன்னோடிப் பணிகளுக்காக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் இவர்களை அங்கீகரித்துள்ளது.
இந்த மதிப்புமிக்கப் பரிசின் ஒரு பாதியை ஜோயல் மொகிர் (நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம்) பெற்றார்.
தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நிலையான வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான முன்நிபந்தனைகளை இவர் கண்டறிந்துள்ளார்.
புதிய கண்டுபிடிப்புகள் ஒரு சுய-உற்பத்தி செயல்முறையாக வெற்றிபெற, ஒரு தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்குப் பின்னால் உள்ள அறிவியல் விளக்கங்கள் அவசியம் என்பதை மொகிர் நிரூபித்தார்.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2025 மூன்று பேருக்கு கூட்டாக அறிவிப்பு
