சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 15ஆம் நாள் மாலை லிமா நகரில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் பங்கேற்ற போது, சிலி அரசுத் தலைவர் கேப்ரியல் போரிக்கை சந்தித்துரையாடினார்.
அப்போது ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டுகையில், சீனாவுடன் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட முதலாவது தென்னாப்பிரிக்க நாடு சிலி ஆகும். ஒன்றுக்கு ஒன்று மைய நலன் மற்றும் முக்கிய கவனங்களுக்கு இரு தரப்பும் எப்போதும் உறுதியாக ஆதரவளித்துள்ளன.
அடுத்தாண்டு, சிலியுடன் இணைந்து தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 55ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாகக் கொண்டு, நெடுநோக்கு ரீதியில் பரிமாற்றத்தை நெருக்கமாக்க வேண்டும் என்றும், ஒன்றுக்கு ஒன்று நன்மை தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கி வளர்ச்சி வாய்ப்பைக் கூட்டாகப் பகிர்ந்து கொண்டு, இரு நாட்டு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு புதிய மாபெரும் வளர்ச்சியைப் பெறுவதை முன்னேற்றி இரு நாட்டு மக்களுக்கு மேலும் கூடுதல் நன்மை தர வேண்டும் என்றும் சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.