இந்திய இறக்குமதிகளுக்கு கூடுதலாக 25சதவீத வரி விதித்து, மொத்த வரியை 50 சதவீதமாக உயர்த்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் தொடர்ந்து வாங்குவதால் இந்தியா மீது மேலும் இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார்.
“எட்டு மணி நேரம்தான் ஆகுது. சரி, என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கேட்டபோது கூறினார்.
சீனா போன்ற நாடுகளும் ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்கும் போது இந்தியா ஏன் தனிமைப்படுத்தப்படுகிறது என்று கேட்டதற்கு,”நீங்கள் இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள். நீங்கள் பல இரண்டாம் நிலை தடைகளைப் பார்க்கப் போகிறீர்கள்” என்று கூறினார்.
அமெரிக்காவின் திருத்தப்பட்ட வரிகள் ஆகஸ்ட் 27 முதல் நடைமுறைக்கு வரும்.
இன்னும் முடியல…இந்தியா மீது 50% வரி விதித்த பிறகு டிரம்ப் எச்சரிக்கை
