கல்கி 2898 AD கர்ணன் சர்ச்சை: ரசிகரின் விமர்சனத்திற்கு மகாபாரத ஆதாரத்துடன் இயக்குனர் நாக் அஸ்வின் கொடுத்த மாஸ் பதில்  

Estimated read time 1 min read

பிரபாஸ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தில், கர்ணனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனத்திற்கு இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதத்தின் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி பதில் அளித்துள்ளார்.
பொதுவாக இணைய விவாதங்களில் ஈடுபடாத நாக் அஸ்வின், இந்த முறை மகாபாரத பக்கங்களை ஆதாரமாகக் காட்டி ரசிகர்களை அமைதியாக்கியுள்ளார்.
அண்மையில் வெளியான ‘லெனின்’ திரைப்படத்தில் நடிகர் பிரமோத் கர்ணனாக நடித்திருந்தார்.
அவரது நடிப்பை பாராட்டிய சமூக வலைதள பயனர் ஒருவர்,”பிக் ஸ்கிரீனில் கர்ணன் கதாபாத்திரம் இப்படித்தான் காட்டப்பட வேண்டும்” என்றும், ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தில் கர்ணன் பாத்திரம் மிகைப்படுத்தி காட்டப்பட்டதாகவும், படத்தின் கிளைமாக்ஸ் மகாபாரத வரலாற்றையே கொச்சைப்படுத்துவது போல் அமைந்துள்ளதாகவும் நாக் அஸ்வினை சாடியிருந்தார்.

You May Also Like

More From Author