சேலைகளை நெசவு செய்யும் ஏ.ஐ.தொழில்நுட்பம் – AI மாநாட்டில் காட்சிப்படுத்திய TCS நிறுவனம்!

Estimated read time 1 min read

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஏ.ஐ. உச்சிமாநாடு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த மாநாட்டில் சேலைகளை நெசவு செய்யும் ஏ.ஐ.தொழில்நுட்பத்தை டிசிஎஸ் காட்சிப்படுத்தியுள்ளது.

பாரம்பரிய கைவினை கலைஞர்கள் நவீன உலகில் போட்டியிடும் வகையில் இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

தறியில் ஏற்றப்படும் சேலைகள் எந்த டிசைனில் இருக்க வேண்டும் என்பதை 3D மூலம் நெசவாளர்கள் கண்கூடாக முன்கூட்டியே பார்க்க முடியும்.

ஓவியங்கள், படங்கள், வடிவங்களை தீர்மானித்து உள்ளீடாக வழங்கும்போது, தறிக்கு தயாரான வடிவமைப்புகளாக ஏ.ஐ.தொழில்நுட்பம் மாற்றுகிறது.

டிசிஎஸ் காட்சிப்படுத்தியுள்ள ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் சேலைகளை எளிதாகவும், விரைவாகவும் நெசவாளர்கள் நெய்ய முடியும் என்பதுதான் இதில் உள்ள சிறப்பாக பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author