சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா டயலாக் (Shangri-La Dialogue) பாதுகாப்பு மாநாட்டில் பேசிய இந்தியப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங், வியட்நாமுடனான பிரம்மோஸ் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
வியட்நாம் நாட்டுடனான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டதாகவும், அது இன்னும் பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டுடன் 375 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைக்கான முதல் வெளிநாட்டு விற்பனை ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
வியட்நாமுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்கும் இந்தியா!
