ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
கொரோனா காரணமாக 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் மார்ச் மாதம் 22ஆம் தேதி நடைபெற்றது. இதில் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (DSF), இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)க்கு எதிராக போட்டியிட்டது.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை எண்ணப்பட்ட 1,995வாக்குகளில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஏபிவிபி வேட்பாளர் உமேஷ் சந்திரா 812 வாக்குகளையும், இடதுசாரி வேட்பாளர் 737 வாக்குகளையும் பெற்றனர்.
தலைவர் பதவி : முன்னிலை நிலவரம்
அபிஜீத் குமார் (INDP)- 17
அஃப்ரோஸ் ஆலம் (CRJD)- 7
ஆராதனா யாதவ் (எஸ்சிஎஸ்)- 98
பிஸ்வஜித் மிஞ்சி (பாப்சா)- 90
தனஞ்சய் (இடது)- 737
ஜுனைத் ராசா (NSUI)- 83
சார்தக் நாயக் (திஷா)- 29
உமேஷ் சந்திரா அஜ்மீரா (ABVP)- 812
நோட்டா – 66
துணைத் தலைவர் : முன்னிலை நிலவரம்
அங்கூர் ராய் (INDP)- 472
அவிஜித் கோஷ் (இடது)- 636
தீபிகா சர்மா (ஏபிவிபி)- 661
முகமது அனஸ் (பாப்சா)- 194நோட்டா – 72
பொதுச்செயலர்
அர்ஜுன் ஆனந்த் (ABVP) – 917
ஃபரீன் ஜைதி (NSUI) – 181
ப்ரியன்ஷி ஆர்யா (பாப்சா) – 754
நோட்டா – 89
இணைச் செயலர் : முன்னிலை நிலவரம்
கோவிந்த் டாங்கி (ABVP) – 966
மோ சஜித் (இடது) – 705
ரூபக் குமார் சிங் (பாப்சா) – 131
நோட்டா – 159
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று இரவு இறுதி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.