கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Estimated read time 0 min read

கடலூர் மாவட்டத்தில் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. குள்ளஞ்சாவடியில் இருந்து ஆலப்பாக்கம் செல்லும் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி நீரோடை, அணுகம்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வாய்க்கால்களில் நீர் நிரம்பி சாலைகளில் வழிந்தோடுவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author