மகளிரணி கூட்டத்தில் அரசியல் பேசாத தனுஷ்!

Estimated read time 0 min read

செம்மஞ்சேரியில் நடைபெற்ற மகளிரணி கூட்டத்தில் நடிகர் தனுஷ் அரசியல் பேசவில்லை.

சோளிங்கநல்லூரில் நடிகர் தனுஷ், பெண் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அங்கு வந்த பெண் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக பரிசு பொருளாக ஒவ்வொருவருக்கும் 10,000 மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொடுத்திருக்கிறார்.

பின்னர் மேடையில் பேசிய நடிகர் தனுஷ், நன்றாக படியுங்கள், உங்களுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள், பெண்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும் என பெண் நிர்வாகி மத்தியில் தனுஷ் பேசி இருக்கிறார். ஒரு பாடல் ஒன்று பாடி இருக்கிறார். எத்தனை சாமி வந்தது ஐயா என்ற பாடலை பாடியிருக்கிறார். சோசியல் மீடியாவில் வரும் செய்தி எல்லாம் நம்பாதீர்கள் நல்லதே நடக்கும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என பேசிவிட்டு அனைவரிடமும் புகைப்படம் எடுத்துக் கொண்டாராம். பெரிய அளவில் அவர் அரசியல் எதுவும் பேசவில்லை என்று கூறுகிறார்கள் அங்கு வந்திருந்த பெண் நிர்வாகிகள்.

Please follow and like us:

You May Also Like

More From Author