அரையளவான பூமியைக் கடந்த ஒத்துழைப்பு

உருகுவே அரசுத் தலைவர் யமந்து ஓர்சி சீனாவில் பிப்ரவரி முதல் நாள் முதல் 7ஆம் நாள் வரை அரசு முறை பயணம் மேற்கொண்டார். லத்தீன் அமெரிக்க மற்றும் தெற்குலக நாடுகள், சீனாவுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் ஆர்வத்தை ஓர்சியின் இப்பயணம் வெளிக்காட்டியது.

இப்பயணக்காலத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஓர்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில்,

சர்வதேச நிலைமை எவ்வாறு மாற்றினாலும், சீனாவும் உருகுவேவும், ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிப்பதிலும், ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பிலும் ஊன்றி நின்று வருகின்றன. புதிய நிலைமையில், இரு நாடுகள் பாரம்பரியத்தை வெளிக்கொணர்ந்து, பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை ஆழமாக்க வேண்டும் என்றார்.

சமநிலையிலும் ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் அடிப்படையிலும் மனமார்ந்த நட்புறவையும் உறுதியான அரசியல் நம்பிக்கையையும் கட்டியமைப்பது இரு நாடுகளின் ஒத்த கருத்து ஆகும் என்று கூட்டறிக்கையில் இரு நாடுகளும் வலியுறுத்தின.

வர்த்தகம் முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பும் 19 ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை எட்டியுள்ளன. சீன-லத்தீன் அமெரிக்க ஒத்துழைப்பின் உயிராற்றலுக்கும் உறுதித்தன்மைக்கும் இது சாட்சியளித்தது. சீன-உருகுவே நட்புறவு, சீன-லத்தீன் அமெரிக்க நாட்டு நட்புறவின் மாதிரியாகும். இது தெற்குலக நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளின் எடுத்துக்காட்டாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author