தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு 870 கி.மீ தென்கிழக்கு திசையில் இது நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களுக்கு இன்று (அக்.25) கன முதல் மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
