உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு!

Estimated read time 0 min read

முக்கிய எண்ணெய் வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவெடுத்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் இருந்து ஆசிய நாடுகளை இணைக்கும் நீர் வழித்தடமாக ஹார்முஸ் நீரிணை உள்ளது. இதன் வழியாக உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது.

இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

You May Also Like

More From Author