சீன செம்படை நீண்ட பயணத்தை நினைவுக் கூரும் கலைநிகழ்ச்சியில் AI பயன்பாடு

சீன செம்படையின் நீண்ட பயணம் வெற்றி பெற்றதன் 90ஆவது ஆண்டு நிறைவை நினைவுக் கூரும் வகையில், நீண்ட பயண வெற்றிக்கு பாராட்டு எனும் கலைநிகழ்ச்சி அக்டோபர் 22ஆம் நாள் வியாழக்கிழமை இரவில் ஒளிபரப்பப்பட்டது. சீன ஊடகக் குழுமத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கலைநிகழ்ச்சியில், செயற்கை நுண்ணறிவு(AI) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, சீன செம்படை நீண்ட பயணத்தின் முக்கிய வரலாறு காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும், சாதாரண காணொளி கண்ணோட்டத்தின் வரம்புகளைக் கடந்து, செயற்கை நுண்ணறிவுடன் கூடிய  180 டிகிரி கோணப் பதிவு அமைப்பு (multi-angle recording system) பயன்படுத்தப்பட்டது. இது, ஒட்டுமொத்த மேடை(ஸ்டுடியோ) மற்றும் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை மிகத் துல்லியமாகவும், தெளிவான காட்சிகளாகவும் வழங்கியது.

தவிரவும், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, பல அரிய வரலாற்று திரைப்படங்கள் மறுஉருவாக்கப்பட்டன. சில பழைய படங்களை அசைவூட்டப்பட்டன.

Please follow and like us:

You May Also Like

More From Author