தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் 11-ம் ஆண்டு தொடக்க விழா, சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், செய்தி வாசிப்பாளர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், சினிமாவில் ஸ்டாராக இருப்பதற்கு தொலைக்காட்சி தான் அடிப்படை காரணம் எனவும், செய்தி வாசிப்பாளர் சங்கத்திற்கு தனது பங்களிப்பு எப்போதும் இருக்கும் என்றும் கூறினார்.
சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி என்றும், செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்திற்கு தன்னுடைய பங்களிப்பு எப்போதும் இருக்கும் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார்.
