சீனாவில் சுற்றுல பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் நாள் பொது மக்கள் வாழ்க்கை குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. 

அதில் பண்பாட்டு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் சுன் யேலி கூறுகையில்,

சீன அரசு தொகுதியான கொள்கைகளின் மூலம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சீனாவில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதைச் செழுமையாக்கியது. 2025ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், சீனாவில் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை 15 கோடியைத் தாண்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 17 விழுக்காடு அதிகம். சீனாவில் அவர்கள் மேற்கொண்ட செலவு, 13 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது. விசா விலக்கு கொள்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியது என்றார்.

You May Also Like

More From Author