பிரிக்ஸ் விரிவாக்கம் : 4 உறுப்பினர்களில் இருந்து 10ஆக அதிகரிப்பு; பிரிக்ஸ் செல்வாக்கு மற்றும் ஈர்ப்பாற்றல் உயர்வு

Estimated read time 1 min read

பிரிக்ஸ் அமைப்பின் 16ஆவது உச்சிமாநாடு அக்டோபர் 22 முதல் 24ஆம் நாள் வரை ரஷியாவின் கசான் நகரில் நடைபெறுகிறது. பிரிக்ஸ் அமைப்பு விரிவாக்கம் அடைந்த பிறகு நடைபெறும் முதலாவது உச்சிமாநாடாக இது உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.


இவ்வாண்டு ஜனவரி, சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எத்தியோப்பியா ஆகிய நாடுகள், பிரிக்ஸ் அமைப்பில் இணைந்த பிறகு, பிரிக்ஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5-இல் இருந்து 10ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் மக்கள் தொகை, உலகின் மொத்த மக்கள் தொகையின் அரைப்பகுதி என்ற அளவில் உள்ளது. இதன் வர்த்தக தொகை உலகின் ஐந்தில் ஒரு பகுதி கொண்டுள்ளது.

வாங்கும் திறன் சமநிலை என்றால், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பொருளாதார மதிப்பு, உலகின் ஜி.டி.பி. யில் 31.6 சதவீதத்தில் இருந்து 35.6 சதவீதமாக உயர்ந்துள்ளதோடு, இது ஜி-7 அமைப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உலகின் கச்சா எண்ணெய் ஏற்றுமதித் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு 15 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக உயர்ந்தது.


2009ஆம் ஆண்டு, பிரிக்ஸ் அமைப்பின் முதலாவது உச்சிமாநாட்டில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நான்கு உறுப்பு நாடுகள் மட்டும் கலந்து கொண்டன. ஓராண்டுக்குப் பிறகு, இதில் தென்னாப்பிரிக்கா சேர்க்கையால், பிரிக்ஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்தது.


இவ்வாண்டு வரை, பிரிக்ஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரித்து, 10ஆக உயர்ந்தது. மேலும், பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்காக, அதிக நாடுகள் வரிசையில் காத்திருக்கின்றன. குறிப்பாக, இவ்வாண்டு முதல், பல நாடுகள் சேர விருப்பம் தெரிவித்ததோடு, விண்ணப்பத்தையும் சமர்ப்பித்துள்ளன.


கடந்த மே திங்கள், தாய்லாந்து பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான விருப்பம் பற்றிய வரைவுக்கு தாய்லாந்து அரசு ஒப்புதல் அளித்தது.
கடந்த ஜுன் திங்கள், வியட்நாம், இலங்கை, லாவோஸ், வங்காளதேசம், கசகஸ்தான் உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பில் இணைவதில் ஆர்வம் காட்டிய 12 நாடுகளின் பிரதிநிதிகள், ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் பிளஸ் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.


கடந்த ஜுலை திங்கள், பிரிக்ஸ் அமைப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக மலேசியா தெரிவித்தது. கசான் நகரில் நடைபெறும் உச்சிமாநாட்டில் விண்ணப்பத்தை தாக்கல் செய்யும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் அக்டோபர் 14ஆம் நாள் தெரிவித்தார்.

கடந்த ஆண்டின் நவம்பரில் பிரிக்ஸ் அமைப்பில் சேர பாகிஸ்தான் விண்ணப்பித்தது.
இவற்றைத் தவிர, கியூபா, சிரியா, தாய்லாந்து, பெலாரஸ் ஆகிய நாடுகள், பிரிக்ஸ் அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.
30க்கும் அதிகமான நாடுகள் நடப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதை ரஷியா உறுதிப்படுத்தியது.
புதிய உறுப்பினர்களின் சேர்க்கையுடன், பிரிக்ஸ் அமைப்பின் செல்வாக்கு மற்றும் ஈர்ப்பாற்றல் இடைவிடாமல் உயர்ந்து வருகிறது. பிரிக்ஸ் அமைப்பில் திறந்த நிலை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுவது என்ற ஒத்துழைப்புக் கருத்து, இதன் செல்வாக்கு உயர்ந்து வருவதற்கான முக்கிய ஆதாரமாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author