ஈரோட்டில் பலத்த காற்றுடன் கனமழை : 10,000 வாழைமரங்கள் சேதம்!

ஈரோட்டில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 10 ஆயிரம் வாழைமரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

ஈரோட்டில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் தலமலை, கோடிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

இதனால், சுமார் 10 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. 40 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You May Also Like

More From Author