டெல்லியில் கனமழை; 100 விமானங்கள் தாமதம், 40 விமானங்கள் திருப்பி விடப்பட்டன  

Estimated read time 1 min read

வெள்ளிக்கிழமை அதிகாலையில் டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
40க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன, கிட்டத்தட்ட 100 விமானங்கள் தாமதமாகின.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டெல்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த சில மணி நேரங்களுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரித்துள்ளது.
காலை 5.30 மணி முதல் 5.50 மணி வரை, பிரகதி மைதானத்தில் அதிகபட்சமாக மணிக்கு 78 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

You May Also Like

More From Author