ரஷிய அரசுத் தலைவரின் துணையாளர் யூரி உஷாகோவ் 29ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, ரஷிய அரசுத் தலைவர் புதின் அதே நாளில், அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பினைத் தொலைபேசி தொடர்புகொண்டார்.
இத்தொடர்பின் போது வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு, ஈரான் மோதல், உக்ரைன் பிரச்சினை ஆகியவை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிகொண்டனர். ரஷியாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இத்தொடர்பு ஒன்றரை மணி நேரமாக பயனுள்ளதாக அமைந்தது என்றும் இரு தலைவர்களும் நேர்மையான மனப்பாங்குடன் உரையாடினர் என்றும் யூரி உஷாகோவ் தெரிவித்தார்.
இத்தொடர்பின் போது புதின், ரஷிய தரப்பின் சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் பற்றிய நிலைமையை டிரம்புக்கு விளக்கியதோடு, ரஷ்யாவின் வெற்றி தின நாளில் தற்காலிக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
