நடுவானில் 300 அடிகள் தடாலென கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானத்தால் பரபரப்பு  

Estimated read time 1 min read

தாய்லாந்தின் பூகெட்டில் இருந்து டெல்லி நோக்கி பறந்து வந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் திடீரென ஏற்பட்ட கொடூரமான காற்றுப் கொந்தளிப்பில் சிக்கி சுமார் 300 அடிகள் வரை கீழே சரிந்தது.
இதனால் விமானத்திலிருந்த பயணிகள் பலரும் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூகெட்டில் இருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியாவின் AI2379 விமானம், இலக்கை நெருங்கும் வேளையில் நடுவானில் மோசமான சுழற்காற்றில் சிக்கியது.
Flightradar24 தகவல்களின்படி, விமானம் டெல்லியில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அதன் உயரத்தை திடீரென இழந்தது.
பயணிகள் பலர் தூங்கிக் கொண்டிருந்த போது, விமானம் சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் வரை பயங்கரமாக குலுங்கி சரிந்ததாகக் கூறப்படுகிறது.

You May Also Like

More From Author